Subscribe Us

header ads

கலாம் இறந்த பின்னும் உயிர்ப்புடன் இருக்கும் அவரது டுவிட்டர் பக்கம்



அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்துவிட்டாலும் அவரது டுவிட்டர் பக்கம் உயிப்புடன் தொடர்ந்து இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாமிற்கு மிக நெருக்கமானவர்கள் இணைந்து அவரது டுவிட்டர் பக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் டுவிட்டர் பக்கத்தின் பெயர் மட்டும் 'கலாமின் நினைவுகளுடன்’ ('In memory of Dr Kalam'.) என்று மாற்றப்படும் என அப்துல் கலாமின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் கூறியுள்ளார்.

கலாமின் டுவிட்டர் கணக்கு மூலம் அவரது எண்ணங்கள், கொள்கைகள், இந்தியாவை பற்றிய அவரது கனவுகள் ஆகியவற்றை தொடர்ந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலாமின் டுவிட்டர் பக்கத்தை 1.4 மில்லியன் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments