Subscribe Us

header ads

இலவச இணைய சேவை திட்டத்தை விரிவுப்படுத்த பேஸ்புக் முடிவு...



இண்டர்நெட்.ஆர்க் என்ற திட்டத்தின் மூலம் 17 நாடுகளில், சில இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்கி வருகிறது பேஸ்புக் நிறுவனம். இதற்காக அந்த குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த மொபைல் ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் நிறுவனத்திற்கு கிடைத்த பலன் ஆகியவற்றால், இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9 மில்லியன் பேரை இணைய உலகிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி அனைத்து மொபைல் ஆபரேட்டர்களையும் இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் இணைப்பதால் இன்னும் பல கோடி மக்களை இணையத்தை பயன்படுத்துபவர்களாக மாற்ற முடியும். மேலும் மொபைல் ஆபரேட்டர்களும் இதனால் பயனடைவார்கள் என்று அந்நிறுவனத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது பேஸ்புக், விக்கிப்பீடியா உட்பட சில இணையதளங்களை மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments