Subscribe Us

header ads

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை – ஜனாதிபதி


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாராளுமன்றில் அங்கம் வகித்தவர்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவது பொருத்தமாக அமையாது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக புத்திஜீவிகளை பாராளுமன்றிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்கள் இதில் உள்ளடக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாதவர்கள் இந்தப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments