முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசாரம் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும், அவரது சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவின் நெறியாள்கையின் கீழேயே நடைபெறவுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருக்கும் பஷில் ராஜபக்ஷ, இம்முறை மஹிந்தவோடு இருந்து முழுநேரம் பணியாற்றப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் மஹிந்தவின் தேர்தல் முகாமையாளராக பஷிலே கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments