கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிரபல இணையதள நிறுவனம் மூலம் அதிரடி விலை குறைப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.44,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 32 ஜி.பி. திறனுள்ள நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன், ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ரூ.49,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 64 ஜி.பி. திறனுள்ள நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகையை பயனாளிகள் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும்.
இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனமும் தன் பங்குக்கு எக்ஸ்சேஞ்ச் ஆபராக 32 ஜி.பி மற்றும் 64 ஜி.பி. நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு மேலும் சலுகையை அள்ளி வழங்கியுள்ளது. மேற்கண்ட இரண்டு வகையான ஸ்மார்ட் போன்களுக்கும் ரூ.5,000 விலைக்குறைப்பு சலுகையை பிளிப்கார்ட் வழங்கியுள்ளது. அதன்படி ரூ.34,999க்கு விற்பனை செய்யப்படும் 32 ஜி.பி. திறனுள்ள நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் ரூ.29,999க்கும், ரூ.39,999க்கு விற்பனை செய்யப்பட்ட 64 ஜி.பி. நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் ரூ.34,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனில், 6" Display, QHD resolution, 2.7 GH 2.7GHz quad-core Snapdragon 805 processor, 3 GB Ram, ஆன்ட்ராய்டு 5.0 (லாலிபாப்) ஆபரேட்டிங் சிஸ்டம், 13 எம்.பி. திறனுள்ள முன்பக்க கேமரா, 2 எம்.பி. திறனுள்ள பின்பக்க கேமரா, 3,220 மில்லி ஆம்ப் ஹவர்ஸ் பேட்டரி என ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் இப்புதிய ஸ்மார்ட்போனில் புகுத்தப்பட்டுள்ளது.


0 Comments