மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட யாகூப் மேமன் இன்று வியாழக்கிழமை அதிகாலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
யாகூப் மேமன் தரப்பில் கடைசி வரை முயற்சிக்கப்பட்ட சட்டப் போராட்டங்கள் பலன் தரவில்லை எனவும், மும்பையில் உள்ள யாகூப் மேமன் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை அடுத்து, யாகூப் மேமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி மனுவும் அதிகாலை 5 மணியளவில் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
யாகூப் மேமனுக்கு 54 வயதாகும் நிலையில், தனது பிறந்த நாளான இன்று (ஜூலை 30) யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாகூப் மேமன் அதிகாலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என்று நாக்பூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பிரதேப் பரிசோதனைக்காக அவரது உடல் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


0 Comments