Subscribe Us

header ads

கிழக்கின் சிலர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணுகின்றார்கள் -புலனாய்வுப் பிரிவு


கிழக்கின் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த காங்களில் பாகிஸ்தானிலிருந்து சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்தவர்கள் கிழக்கிற்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஜிஹாதிய இயக்கங்களும் கிழக்கில் செயற்பட்டிருந்ததாகவும் அது குறித்த தகவல்களையும் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியிருந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையின் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, மலேசிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் பற்றி விபரங்களை திரட்டுவதற்கு இலங்கைக் காவல்துறையினர் வெளிநாடுகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர். குறிப்பாக துருக்கி, ஈராக் மற்றும் லெபானன் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
 

Post a Comment

0 Comments