Subscribe Us

header ads

ஓடிய ஹிருணிகாவை தடுத்தார் மைத்திரி.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவும் நிலைப்பாட்டில் இருந்த மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்தியிருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வசமிருக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை தொகுதி அமைப்பாளர் பதவியை ஹிருணிகாவுக்கு பெற்றுத் தருவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
ஆயினும், ஹிருணிகா இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவர் சார்பு அணியினருக்கு வேட்புரிமை வழங்கப்பட்டதில் ஹிருணிகா கட்சி தலைமையோடு மனக்கசப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hirunika 01Hirunika 02Hirunika

Post a Comment

0 Comments