Subscribe Us

header ads

இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு

-Inamullah Masihudeen-



இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு குறித்த முதலாவது கூட்டம் ஜனாதிபதி அவர்களின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெரும் என சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என அதன்பொதுச் செயாலாளார் அமைச்சர் சுஸில் பிரேம்ஜெயந்த் அறிவித்துள்ள நிலையில்பல்வேறு ஊகங்க ள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன.

கூட்டணியின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சி அதுகுறித்து எத்தகைய முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி எடுத்துள்ள முடிவுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் சுதந்திரக் கட்சியின் பிரதான ஆலோசகர்களில் ஒருவரான சந்திரிக்கா அம்மையார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தனது உபாயங்களை வெளியிட தனக்கு இரண்டொரு நாள் தேவைப்படுவதாகவும் அதற்கு அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி மைத்ரி சந்திரிக்கா அம்மையாரிடம் அவரது பிறந்த தின நிகழ்வுகளில் பொழுது நேற்று முன்தினம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஜாதிகஹெல உறுமய வெளியேறி தனித்துச் செயற்படப் போவதாக நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தது.

முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹகீம் காங்கிரஸ்கள் ஏற்கனவே ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கான tநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகியோர் தனித்தநியாக தமதுகுழுக்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து செயற்பட முடிவெடுத்திருந்தனர்.

நல்லாட்சிக்கான தேசியமுன்னணி பல்வேறு தரப்புக்களுடனும் தீவிரபேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை இரண்டொரு நாட்களுக்குள் அதன் முடிவை இன்ஷா அல்லாஹ் அறிவிப்பதாக அதன் பொதுச் செயலாளர் ஷெய்க் நஜா முஹம்மத் தெரிவித்துள்ளார்.

(இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான அழைப்பிதல் எனக்கும்கிடைக்கப் பெற்றுள்ளது. நாம நோன்பு துறக்கத்தான் போறோம்)

Post a Comment

0 Comments