Subscribe Us

header ads

சகல நோய்களுக்கு தீர்வளிக்கும் கசப்பான அமிர்தம்

கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
பாகற்காயை ஊறுகாய், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு, என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
100 கிராம் பாகற்காயில் உள்ள சத்துக்கள்
கலோரி - 25 மி.கிராம்,
கால்சியம் - 20 மி.கிராம்,
பாஸ்பரஸ் - 70 மி.கிராம்,
புரோட்டின் - 1.6%,
கொழுப்பு - 0.2%,
இரும்புச்சத்து - 1.8 மி.கிராம்,
மினரல்ஸ் - 0.8%,
பி காம்ளெக்ஸ் - 88 மி.கிராம்,
நார்ச்சத்து - 0.8%,
கார்போஹைட்ரேட் - 4.2%,
மேலும், விட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின், ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி-ஹைபர் க்ளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு இரத்த சர்க்கரையை கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கிறது.
அதுமட்டுமல்லாது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
மேலும் செரிமான அமிலமான Gastrc Acid அதிகமாக சுரப்பதால் பசி அதிகரிக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.
டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை polypeptide-p என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.
இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது.
நோய்களுக்கு
சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையும்.
மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.
கல்லீரல் பிரச்சனை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.
மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.
குறிப்பு
பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

Post a Comment

0 Comments