Subscribe Us

header ads

மன அழுத்தத்தைக் குறைக்கும் மல்லிகைப்பூ!


மல்­லி­கையின் இலை, பூ, வேர் எல்­லாமே மருத்­துவ குணம் கொண்­டவை. இலை­களை நல்­லெண்­ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்­தடம் கொடுக்­கலாம்.
இலையை நன்­றாக அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் மருந்­தாகப் பயன்­ப­டுத்­தலாம். வீக்கம் உள்ள இடத்தில் பற்­றுப்­போட்டால் உட­ன­டி­யாக வீக்கம் குறையும்.
மல்­லிகை பூ ஈஸ்ட்­ரோஜன் செயல்­பாட்டை அதி­க­ரிக்கும் தன்­மை­ கொண்­டது. எனவே, பெண்கள் மெனோபாஸ் கட்­டத்தில், மல்­லிகை பூவைத் தண்­ணீரில் போட்டு, கொதிக்­க­வைத்து, பனங்­கல்­கண்டு சேர்த்து, கஷா­ய­மாகக் குடிக்­கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரப்­பதால் அவ­திப்­படும் தாய்­மார்கள், ஒரு கைப்­பிடி மல்­லிகைப் பூவை மார்­ப­கத்தில் வைத்துக் கட்­டினால், பால் சுரப்பு குறையும்.
இரவில் பூப்­ப­தினால், நறு­மணம் அதி­க­மாக இருக்கும். மல்­லி­கையைத் தலையில் வைப்­பதால், மூளையின் கீழ்ப்­ப­குதி வெப்­ப­ம­டை­வதைத் தடுக்கும். மன அழுத்­தத்தைக் குறைக்கும். தலையில் வைத்­துக்­கொள்ள விருப்பம் இல்­லா­த­வர்கள், தலை­ய­ணையில் வைத்து உறங்­கலாம். இது மன­நி­லையை மாற்றும். மனக் கலக்­கத்தைப் போக்கும். நேசத்தைத் தூண்டும்.
வெயில் மற்றும் உடல் வெப்­பத்தால் கண் சிவந்­து­போதல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் வரும்போது கண்­களில் மல்­லிகைப் பூவை­வைத்து, கைக்­குட்­டையால் சிறிது நேரம் கட்­டி­யி­ருந்தால், கண்கள் குளிர்ச்சியடையும்.
நல்­லெண்­ணெ­யுடன் சிறிது மல்­லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்­யலாம். உடல்­வலி நீங்கும். குளிர்ச்சி யடையும்.
தேயி­லை­யுடன், கைப்­பிடி அளவு மல்­லிகைப் பூவைச் சேர்த்து, நீரில் கொதிக்­க­வைத்து ‘கிரீன் டீ’ போல் அருந்­தலாம். புத்­து­ணர்ச்சி கிடைக்கும். மல்­லிகை எண்ணெய், உடலில் தேமல் வராமல் தடுக்கும், தோல் சுருக்­கத்தைக் குறைக்கும், நீர்ச்­சத்தை அதி­க­ரித்து, முகம் பொலிவு பெறச் செய்யும்.
மல்­லிகை வாசனை, சில­ருக்கு ஒவ்­வாது. அதற்குக் காரணம், மல்­லி­கையில் உள்ள எண்ணெய். இது, நேர­டி­யாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இதனால், சிலருக்கு மயக்க உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையைத் தவிர்ப்பது நலம்.

Post a Comment

0 Comments