இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் உள்ள பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சாரா கால்வில்(40).
கடந்த 2005-ம் ஆண்டு இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக பக்கவாதமும் தாக்கியது. இதையடுத்து, அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஒருவழியாக அவரது உயிரை காப்பாற்றி கண்விழிக்க வைத்தனர். ஆனால், தனது தாய்மொழியான ஆங்கிலத்தை முழுவதுமாக மறந்துப்போன அவர், அதுவரை பழகி அறியாத அன்னிய மொழியான சீன மொழியில் வெகு சரளமாக பேச ஆரம்பித்தார்.
அவரது சொந்த மொழி தொடர்பான நினைவாற்றலை மீட்டு கொண்டுவர பாடுபட்ட நரம்பியல் துறை டாக்டர்கள் பலரும் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்து விட்டதால் இனி வாழ்நாள் முழுவதும் இவர் இப்படியே இருக்க வேண்டியதுதான் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது, பேச்சு சிகிச்சை நிபுணர் (ஸ்பீச் தெராபிஸ்ட்) மூலம் தொடர்ந்து ஆங்கில மொழியை அதற்கேயுரிய சிறப்பு உச்சரிப்புடன் பேச இவர் கற்று வருகிறார். உலகில் இதுபோல் தாய்மொழியை மறந்துவிட்டு திடீரென பிறமொழிகளை சரளமாக பேசும் மொத்தம் 20 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சாரா கால்விலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments