Subscribe Us

header ads

நண்பர்கள் வீட்டில் வைத்து பூட்டியதால் புகைப்போக்கிக் கூண்டு வழியாக வெளியேற நினைத்த இளைஞன் மாட்டிக்கொண்ட பரிதாபம்



அமெரிக்காவின் அரிசோனா மாகணத்தில், வீட்டின் புகைப்போக்கிக்குள் மாட்டிக்கொண்டவரை தீயணைப்பு வீரர்கள் வந்து காப்பாற்றினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4-ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லோரும் இதனை விமரிசையாக கொண்டாடுவர். பீனிக்ஸ் நகரில், சில நண்பர்கள் சேர்ந்து சுதந்திர தின பார்ட்டிக்கு வந்த ஒரு நண்பரை (வயது 23) விளையாட்டாக வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டனர்.

எப்படியாவது தன் வீட்டுக்குத் திரும்ப நினைத்த அவர், புகைப்போக்கி கூண்டுதான் ஒரே வழி என எண்ணி அதற்குள் புகுந்து வெளியேற முயன்றார். ஆனால், புகைப்போக்கி கூண்டுக்குள் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டார். 

இதனால் பதறிப்போன நண்பர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு போன் செய்தனர். அவர்கள் 30 நிமிட போரட்டத்துக்கு பின், மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தீயணைப்பு துறை கேப்டன், ஆரோன் எர்ன்பெர்கெர் தெரிவித்தார்.

புகைப்போக்கி கூண்டுக்குள் மாட்டிக்கொண்டவரின் இன்னும் பெயர் வெளியிடப்படவில்லை.

Post a Comment

0 Comments