இந்த காலத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ள சூழலில் பெங்களூருவிலுள்ள ஆட்டோ டிரைவரை பற்றி சிலாகித்து கூறுகிறார் சகோதரி ரஞ்சனி...
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் காசம்பர் அலி,
பெங்களூர் சிட்டியில் இருந்து கனக்புரா என்ற இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு மணிநேரம் காத்திருந்து ஒரு ஆட்டோவில் ஏறினேன்,
போகவேண்டிய இடத்தை சொன்னதும், அந்த இடத்திற்கு ஆட்டோவை அனுமதிக்கமாட்டார்கள் அதனால் வேறு ஒரு வழியில் செல்லலாம் என ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச்சென்றார்.
நான் கூகுள் மேப் மூலம் அவருக்கு வழியை சொல்லி போக சொன்னேன்,
அதன்படி ஓட்டுநர் அந்த வழியில் அழைத்துச் சென்றார். ஆனால் அந்த வழி மிகவும் இருட்டாக தான் இருக்கும் அதனால் தங்களுக்கு பிரச்சனை இல்லையே என்று ஓட்டுநர் கேட்டார்.
சரி என்று கூறிவிட்டு சுமார் அரை மணி நேரம் அந்த இருண்ட சாலையில் பயணித்தேன், எனக்கு துணையாக என் கையில் இருந்தது செல்போன் மட்டுமே...
இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்கும் அளவிற்கு பயணம் முழுவதும் ஓட்டுநரின் நடவடிக்கை மிகவும் கண்ணியமாக இருந்தது,
அதுமட்டுமில்லாமல் என்னுடைய தோழி வந்து அழைத்து செல்லும் வரை சுமார் 20 நிமிடங்கள் ஆட்டோ ஓட்டுநர் கூடவே இருந்து பாதுகாப்பாக சாலையை கடக்கவும் உதவி செய்தார்.
இந்த காலத்தில் பகல் நேரங்களிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் இரவு நேரத்தில் ஓட்டுநர் காசம்பர் அலியின் கண்ணியம் தம்மை நெகிழ வைத்து விட்டதாக ரஞ்சனி சிலாகித்து கூறியுள்ளார்.
நன்றி : தினகரன்


0 Comments