( முஹம்மட் றின்ஸாத் )
கல்முனை நுாரானியா பள்ளிவாசளின் ஏற்பாட்டில் இன்று 2015.07.05ம் திகதி புனித பத்ர் ஸஹாபாக்கள் தினத்தினை முன்னிட்டு மாெபரும் கந்தூரியும் பத்ரிய்யீன்கள் நினைவான கொடியேற்றமும் பத்ர் மவ்லித் ஓதப் பட்டது,
பத்ர் ஸஹாபாக்களை நினைவு படுத்தி நடைபெற்ற இன்றைய நிகழ்வில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு கந்தூரி அன்னதானம் வழங்கப்ப்ட்டதும் குறிப்பிடத் தக்கது.
பள்ளிவாசலின் தலைவரும் கல்முனை சுன்னத் வல் ஜமாத் பேரவையின் தலைவருமான ஜனாப் ஹனீபா jp அவர்களின் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ..
சிறப்புறை ...
மெளலவி ஏ.ஏ.ஜப்ரான் கெளஸி அவர்கள் பத்ர் ஸஹாபாக்கள் பற்றி பேசியதுடன் நாட்டின் சுபிட்சத்திக்கும், வளமான வாழ்வுக்கும் மெளலவி அல் ஹாபிழ் ரியாஸ் அல்தாபி துஆ பிரார்த்தனை செய்தார்கள்.
மெளலவி அப்துர்ரஹ்மான் கெளஸி மெளலவி ஹபிழ் மன்பயி, மெளலவி ரிஸ்கான் வாஹிதி, மெளலவி அனிஸ் மற்றும் ulm.ஹிபான் esf ஆகியோரின் பங்களிப்புடன் அரபிக்கல்லூரி மாணவர்கள், சுன்னத் ஜமாத் சகோதர்களின் அனுசரனையுடன் பத்ர்மவ்லித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது. ..
அதனோடு ஆயிரம் பேருக்கு கந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.








0 Comments