Subscribe Us

header ads

27 பேரை பலி வாங்கிய குவைத் மசூதி தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 26 பேர் சிறையில் அடைப்பு!



கடந்த குவைத்தில் உள்ள அல் சாதிக் மசூதியில் 2 ஆயிரம் பேர் திரண்டு, தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி அதி பயங்கர தாக்குதல் நடத்தினார்.


இந்த தாக்குதலில் 27 பேர் உடல் சிதறி பலியாகினர். 227 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் நடந்த மசூதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட மன்னர் சபா அல் அகமது அல் ஜபிர், கடும் கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த 26 பேரில் 4 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 10 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments