Subscribe Us

header ads

மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் அரசியலுக்கு திடீரென நுழைந்தவன் அல்ல, எனக்கு 49 வருடகால அரசியல் அனுபவம் காணப்படுகிறது.

கட்சி தொடர்பான தீர்மானங்களின் போது ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற அமைதிப் புரட்சிக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். அந்த அமைதிப் புரட்சியை பாதுகாப்பேன்.

இந்த நாட்டில் அனைவருக்கும் நீதி மற்றும் நேர்மையை உறுத்திப்படுத்தி, ஊழல், அடாவடித்தினம் மற்றும் குடும்ப ஆட்சி இல்லாத நல்லாட்சியை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments