Subscribe Us

header ads

புழுதிவயல் கிராமத்தில் வசிக்கும் ஏழை உறவுகளுக்குப் புனித ரமழான் மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள்


புழுதி வயல் கத்தார் ஒன்றியத்தினால் புழுதிவயல் கிராமத்தில் வசிக்கும் ஏழை உறவுகளுக்குப் புனித ரமழான் மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் நேற்று (03-07-2015) PQU இன் உறுப்பினர்கள் தலைமையில் 65 குடும்பத்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு உலருணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் பல கல்வி அபிவிருத்தி செயற் திட்டங்களுக்கு இவ்வமைப்பு நிதியுதவி செய்து உள்ளது, குறிப்பாகப் புலமை பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கருத்தரங்கு, கல்வி பொது தராதர சாதாரண / உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவித்தல், அதுமட்டுமல்லாது சகாத்துள் பித்ரா, பகுதி நேர அரபிக் கல்லூரிக்கு மின்னிணைப்பு பெற நிதியுதவி, பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் அமைக்கத் தேவையான காணி ஒன்றை கொள்வனவு செய்ய நிதியுதவி, எனப் பல செயற்திட்டங்களுக்கு தொடர்ந்தும் உதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத்து.
புழுதி வயல் கத்தார் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, இந்தச் செயற்திட்டங்களுக்கு தொடர்ந்தும் உதவி செய்வும் எம்நல்லுங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக.
PQU ஊடகப்பிரிவு



Post a Comment

0 Comments