Subscribe Us

header ads

காபி மக்கை வைத்து மகன்களை சூப்பர் ஹீரோவாக மாற்றும் அப்பாக்கள்


ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்று தங்கள் மகனை மாற்றுவது கஷ்டம் (காஸ்ட்யூம் செலவு ஜாஸ்தி) என்பதால் என்ன செய்யலாம் என்று லீவ் போட்டு யோசித்த அப்பாக்கள் சங்கத்தின் அதிரடி கண்டுபிடிப்புதான் ‘மக்‌ஷாட்’.

‘பேட்மேன்’ போன்ற சூப்பர் ஹீரோக்களின் உருவப்படம் பொறித்த காபி மக்குகளை சரியாக தங்கள் மகனின் தலை உள்ள இடத்தில் பொருந்துமாறு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற இதைப் பார்த்த பல அப்பாக்களும் #breakfastmugshot என்ற ஹேஷ்டேகை உருவாக்கி தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தையும் மக்‌ஷாட் எடுத்து போட, வேறென்ன வழக்கம் போல வைரலானது.







Post a Comment

0 Comments