சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகரின் கிங் பைசல் ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் நாறிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஒருவர் டொயோட்டா காரில் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரம்ஜான் விடுமுறை முடிந்து மன்னர் பைசல் ஆஸ்பத்திரி வளாகத்தின் பின் பகுதியில் இருந்து ஒருவகை துர்நாற்றம் வந்ததையடுத்து, பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, கடந்த திங்கட்கிழமையன்று சிகிச்சை பலனின்றி இறந்துப்போன சிறுமி அங்கே அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, 'டொயோட்டா கரோல்லா' காரில் இருந்து இறங்கிய ஒருவர் இறந்துக் கிடந்த சிறுமியை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குள் நுழையும் காட்சி தெரிந்தது.
அந்த நபர் யார்? இறந்த சிறுமிக்கும் அவருக்கும் என்ன உறவு?, அந்த சிறுமியின் இறப்பு நோயால் ஏற்பட்டதா? அல்லது, இதன் பின்னணியில் ஏதேனும் குற்றச் சம்பவம் இருக்குமா? என மதீனா நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


0 Comments