உலகின் மிக நீளமான வாட்டர் ஸ்லைடு, 2000 அடி நீளத்தில் அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் மக்கள் இன்னும் விளையாடத் துவங்கவில்லை.
சாதாரணமாக வாட்டர் ஸ்லைடு சவாரி வெறும் 10 முதல் 30 நொடிகளுக்கு மட்டுமே பயணிக்கும். ஆனால், இந்த நீளமான வாட்டர் ஸ்லைடு ஒன்றரை நிமிடங்களுக்கு நம்மை பரவசப்படுத்தும். இது சமீபத்தில் மிக நீளமான வாட்டர் ஸ்லைடுக்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
ஆக்ஷன் பார்க்கில் இந்த வாட்டர் ஸ்லைடு மனித உழைப்பால் 600 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3,800 லிட்டர் தண்ணீர் இதன் இயக்கத்திற்கு தேவைப்படும்.
நியூஜெர்சி மாநிலத்தின் அனுமதி பெற்ற பிறகு இந்த வாட்டர் ஸ்லைடு மக்கள் விளையாட தயாராகும் என்று கூறப்படுகிறது.



0 Comments