என்னுடைய கைப்பையில் 305 காசுகள் இருக்கிறது அது நான் திருக்குரானை நகலாக எழுதியதற்கு பெற்றுக் கொண்ட கூலி.
அதை ஏழை மக்களுக்கு தானம் செய்திடுங்கள்.
நான் மரணித்த பின்னர் எனக்காக சமாதி எழுப்பி வீண் செலவைச் செய்யாதீர்கள். திருக்குரானை நகலாக எடுத்து எழுதுவதில் நான் தவறிழைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாவேன்.
இறந்தப் பின்னர் இந்தப் பரதேசியை தலைகவசம் இல்லாமல் புதைத்திடுங்கள். மறுமையில் பாவம் இழைத்தவர்கள் இறைவனுக்கு முன்னர் ஆஜர் படுத்தப் படும் பொழுது வெறும் தலையுடன் சென்றால் இறைவனின் பரிதாபத்தைப் பெற முடியும்….
இப்படிச் சொன்னது யார் ?
முகலாய சாம்ராஜ்ஜியத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த மாமன்னர் சுல்தான் ஔரங்கஜெப் ஆலம்கிர் தான். இன்றைய இளைஞர்களுக்கு,
முக்கியமாக இஸ்லாமிய இளைஞர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் இருப்பது வருத்தமே…
மாசிர் – இ -ஆலம்கிரி என்கிற வாழ்கை வரலாறு படைப்பை படியுங்கள். பட்டாபி சீத்தாராமைய்யாவின் FEATHERS AND STONE புத்தகத்தை படியுங்கள். பிஷாம்பர் நாத் பாண்டேவின் CULTURES AND ISLAM என்கிற புத்தகத்தை படியுங்கள். இதை எல்லாம் தெரிந்துக் கொள்ளாமல் மற்றவர்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்களே என்று கோவப் படுவதில் பயனில்லை …
படத்தில் பார்க்கும் இடத்தில்தான் மாமன்னர் புதைக்கப் பட்டார். பல வருடங்கள் எந்தச் சமாதியும் எழுப்பப் படாமல் தான் இருந்தது. அதன் பின்னர் ஹைதராபாத் நவாப் தான் இந்தச் சமாதியை எழுப்பினார்.
இருப்பினும் அவரது கல்லறை மீது எந்த பீடமும் எழுப்பப் படவில்லை.
நன்றி : Kishor. K. swamy.


0 Comments