பெரும்பாலான கட்டிட மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கட்டிடத்தின் அமைப்பை அச்சுறுத்தும் நீர்க்கசிவுகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை.
நீர்க்கசிவு ஆரம்ப நிலையிலேயே தீர்த்து வைக்கப்பட்டிருந்தாலும் குறித்த நீர்க்கசிவினால் ஏற்பட்ட சேதம் பல ஆண்டுகளுக்கு பிரச்சினையாக அமையலாம். கட்டிடங்களில் நீர்க்கசிவினால் ஏற்படக்கூடிய மற்றுமொரு பொதுவான பிரச்சனையாக பூஞ்சணம் காணப்படுவதுடன், இதனை முற்றாக ஒழிக்க மிகவும் கடினமாக அமைவதுடன், குடியிருப்போருக்கு சுகாதார அச்சுறுத்தலும் காணப்படுகிறது.
நீர்க்கசிவு என்பது கட்டிடத்தின் கட்டமைப்பு மற்றும் கூறுகளை படிப்படியாக அரித்து பாரிய பராமரிப்பு செலவுகளை செய்ய வழிவகுத்து விடுகின்றன.
தரமான வோட்டர் புரூபிங் அமைப்பின் பயன்பாடானது கட்டிட அமைப்பின் நீர் இறுக்கத்தை பாதுகாக்க அவசியமானதுடன், கட்டிடங்களை பாதுகாப்பதோடு அதன் கட்டமைப்பின் ஆயுட்காலத்தினை 50 ஆண்டுகள் வரை நீடிக்கச் செய்கிறது.
உள்ளக வோட்டர் புரூபிங் செய்யப்படும் இடங்களில் குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவை அடங்குகின்றன. கூரைகள், மேல்மாடங்கள், retaining மற்றும் சுவர்கள், தண்ணீர் தாங்கிகள் மற்றும் நீச்சல் தடாகங்கள் போன்றவை வெளிப்புறத்தில் வோட்டர் புரூபிங்செய்யப்படும் இடங்களாகும்.
கட்டிடங்களின் கட்டமைப்பை பேணுவதற்கு நீர்க்கசிவினை தடுக்கக்கூடிய சரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தல் அவசியமாகும்.
வோட்டர் புரூபிங் தீர்வுகள் துறையில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ள சியோகா என்ஜினியரிங் நிறுவனத்தின் வோட்டர் புரூபிங் பிரிவானது இலங்கையில் வோட்டர் புரூபிங் தீர்வுகளை வழங்கி வரும் பிரதான விநியோகஸ்தர்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு வோட்டர் புரூபிங் என்பது எந்தளவு முக்கியமான விடயம் என்பது தொடர்பில் நன்குணர்ந்துள்ள சியோகா என்ஜினியரிங் நிறுவனமானது தற்போதைய வோட்டர் புரூபிங் துறையில் சிறந்த தீர்வுகளை உறுதி செய்து குடியிருப்பாளர்களை கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கக்கூடியதும், தமது வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவைகளை வழங்கக்கூடியதுமான வோட்டர் புரூபிங் அமைப்பினை வழங்கி வருகின்றது.
மேலும் இன்றைய கட்டிடக்கலைஞர்கள், ஆலோசகர்கள் மற்றும் கட்டுமானத்துறை நிபுணர்கள் ஆகியோர் பரந்துபட்ட வோட்டர் புரூபிங் உற்பத்திகள் பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றனர்.
“கட்டுமானத் துறையில் வோட்டர் புரூபிங் என்பது விசேட வர்த்தகமாக விளங்குவதுடன், கட்டிடத்தை வடிவமைக்கும் போதும், நிர்மாணிக்கும் போதும் அதிகம் கவனம் செலுத்தப்படாத விடயமாக அமைந்துள்ளது. சிறப்பான வர்த்தக கட்டமைப்பு, விரிவான விநியோகஸ்தர் தொடர்புகள் மற்றும் சிறந்த நிபுணர்களின் ஆலோசனை ஆகியவற்றை கொண்டுள்ள சியோகா வோட்டர் புரூபிங் பிரிவானது அதிசிறந்தவோட்டர் புரூபிங் அமைப்பினை வழங்குவதற்கான திறனை தன்னகத்தே கொண்டுள்ளது” என சியோகா என்ஜினியரிங் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் வோட்டர் புரூபிங் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் சன்ன ரொட்ரிகோ தெரிவித்தார்.
“எமது வோட்டர் புரூபிங் உற்பத்தி தெரிவுகள் மூலமாக கட்டுமானத்துறையில் எமது வாடிக்கையாளர்களின் சவால்களை நிவர்த்தி செய்யவும், துறைசார் கோரிக்கைகளான விரைவு, எளிது மற்றும் நிலையான தீர்வுகள் போன்றவற்றை வழங்கி வருகின்றோம்” என மேலும் ரொட்ரிகோ தெரிவித்தார்.
சியோகா என்ஜினியரிங் (பிரைவட்) லிமிடெட் நிறுவனமானது உலக சந்தையில் தனித்துவம் பெற்ற வோட்டர் புரூபிங் நிறுவனங்களுடன் கைகோர்த்து உள்நாட்டில் விசேடத்துவ உற்பத்திகளை வழங்கி வருகிறது.
சிவில் மற்றும் கட்டிட கட்டமைப்பு ஆகிய இரு துறைகளிலும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வோட்டர் புரூபிங் உற்பத்திகளை கடந்த இரு தசாப்தத்திற்கு மேலாக உற்பத்தி செய்து வரும் Greenseal Products (M) Sdn Bhd நிறுவனம் எமது பிரதான விநியோகஸ்தர்களில் ஒன்றாக விளங்குகிறது.
“சியோகா நிறுவனத்தின் திட நிபுணத்துவம் மற்றும் பல்வேறுபட்ட தளமானது இந்த பிராந்தியத்தில் எமது வர்த்தகத்தை தொடர்ந்து மேம்படுத்த வழிவகுக்கிறது. சந்தை ஸ்தானம், சிறந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் பலவருட அனுபவம் போன்றவற்றை கொண்டுள்ள தனித்தன்மை வாய்ந்த சியோகா என்ஜினியரிங் நிறுவனத்தை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகவராக நியமித்துள்ளோம்” என தீர்வுகளை வழங்கி வரும் சியோகா Greenseal Products (M) Sdn Bhd இன் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் வின்சென்ட் ஹோ தெரிவித்தார்.
DGL குழுமத்தின் ஓர் அங்கமான Selleys Australia நிறுவனம் சியோகாவுடன் கைகோர்த்துள்ள மற்றுமொரு உலகத்தரம் வாய்ந்த விநியோகஸ்தராக திகழ்கிறது.
கடந்து வந்த காலங்களில் சியோகா என்ஜினியரிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம் உத்தேச நேரத்திற்குள் மற்றும் உயர் தரம் வாய்ந்த சேவைகளை வழங்கும் வகையில் கட்டிட கலைஞர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு மிகப்பெரிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உயர்மாடி கட்டிட குடியிருப்பான ‘‘Tower Three of OnThree20’ திட்டத்திற்கு வோட்டர் புரூபிங் தீர்வுகளை சியோகா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாடுபூராகவும் பல்வேறு வோட்டர் புரூபிங் செயற்திட்டங்களை சியோகா பூர்த்தி செய்துள்ளதுடன், இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்று வரும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
சியோகா என்ஜினியரிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம் தற்போது அரச மற்றும் தனியார் துறை திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலீடுகளில் ஒன்றான கீல்ஸ் சிட்டியின் ‘Waterfront Project’ திட்டத்திற்கு தேவையான வோட்டர் புரூபிங் தீர்வுகளை வழங்கி வருகின்றது.
இந்த திட்டங்களின் முன்னணியில் சியோகா என்ஜினியரிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் வோட்டர் புரூபிங் தீர்வுகள் குழுவினர் காணப்படுகின்றனர். அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோர் உயர்தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை பேணும் வகையில் உயர்தரமான சர்வதேச தரங்களுக்கமைய வோட்டர் புரூபிங் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.


0 Comments