முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அபிவிருத்தியை கொங்கிறீட்டினால் அளவீடு செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவிருத்திக்காக எவ்வளவு கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டது என்பதனையே மஹிந்த கவனத்திற் எடுப்பதாகவும், அபிவிருத்தித் திட்டத்தின் பயன் பற்றி கருதுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகிய இரண்டு அபிவிருத் திட்டங்களிலும் பாதகத்தன்மையே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் வழங்குவதாக கூறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதேச மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மாவட்டத்தில் தோல்வியைத் தழுவிய காரணத்தினால் மஹிந்த வேறும் மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


0 Comments