Subscribe Us

header ads

கடந்த 26 வருடமாய் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறையாவது பெற வேண்டும்.

-நான் புத்தளத்தான்-



கடந்த 26 வருடமாய் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறையாவது பெற வேண்டும் எனும் அவாவும், வேட்கையும் புத்தளம் தொகுதி வாழ் மக்களிடம் இம்முறை நிறைந்தே காணப்படுகிறது...

இதன் ஆரம்ப பணிகளாக கடந்த இரு வருடமாய் ஒரு புத்திஜீவிகள் குழு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து சுயேட்சையாய் போட்டியிடும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தது என்பதையும் நாம் அறிவோம்..

இது ஓரளவு வெற்றியையும் பெற்றது எனலாம்..

இதன் ஒரு அங்கமாக கடந்த மாதம் 10.07.2015 வெள்ளிகிழமை அன்று புத்தளம் பெரிய பள்ளியிலே வைத்து அதாவது கட்டுப்பணம் செலுத்துவதற்கு மூன்று தினங்களே எஞ்சியிருந்த நிலையில் சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு பிரிவினரும், பொது குழு பிரமுகர்களும் பழையவைகளை மறந்து ஒன்று பட்டனர்.. அவர்கள் தழுவிய காட்சிகளும் கை கொடுத்து கொண்ட காட்சிகளும் சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பியது...

இதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் நீண்ட நாள் உறுப்பினரும், நகர அமைப்பாளருமான ஜவ்பர் மரிக்கார் பங்கு கொண்டார் , இவர் பின்னால் அந்த கட்சியின் பல இளைஞசர்களும் ஒன்று பட்டு இருந்தனர்..

அந்த இளைஞ்சர் குழு இன்று வரை சுயேச்சை குழுவான ஒட்டகதிற்கே பணி புரிகிறது....

இது இவ்வாறு இருக்க நேற்று புத்தளம் வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த ஒட்டக குழுவை விமர்சிப்பதிலேயே நேரம் கடத்தினார், இதற்கு தலைவரின் வழைமையான கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜவ்பர் மரிக்கார் கலந்து .கொள்ளவில்லை..

ஏனெனில் அவர் அமைதியாய் இருந்து புத்தளம் களம் இறங்கி உள்ள ஒட்டக அணிக்கு சார்பு என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் போலும்...

ஆனால் அதன் பிற்பாடு பாலவி,நாகவில்லுவில் நடந்த கூட்டத்தில் தலைவருக்கு அருகாமையில் இருந்து குலாவி கொண்டு இருந்துள்ளார்...

இது அவரின் இரட்டை வேடத்தை காட்டுவதோடு , முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு விசனத்தை ஏற்படுத்தி உள்ளது...

இது பற்றி முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப போராளி ஒருவர் கூறும் போது இவர்களினால் கட்சி சீரழிந்து போனதாகவும், பாயிஸ் ,அலிகான் ,எஹியா போன்றோர் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் இருந்த போதும் இவரின் சொல்லை தான் தலைவரும் உள்ள காலமும் கேட்பதாகவும் கூறினார்...

போகிற போக்கை பார்த்தால் புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் வீழ்ச்சி காணும் போல் தான் தோன்றுகிறது...


Post a Comment

0 Comments