வெள்ளைக்காரர்களுக்கு தேவையான வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை ஆட்டுவிக்கப் பார்க்கின்றார் என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நடத்தக்கூடிய தலைவர்கள் இருந்தார்கள். எனினும் ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசாங்கமொன்றை நடத்தக் கூடிய அற்றல் கிடையாது.
கிராம மக்களின் வேதனைகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு புரியாது. கிராம மக்களின் இதயத் துடிப்பினை நாம் நன்கு அறிவோம்.
தேயிலை மற்றும் இறப்பர் ஆகியனவற்றுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே கிராம மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
அவ்வாறு இல்லாமல் வொக்ஸ்வோகன் கார் உற்பத்தி நிலையங்களை கிராம மக்கள் கோரவில்லை.
வெள்ளைக்காரர்களுக்கு தேவையான வகையில் நாட்டை ஆட்டுவிக்கவும் மேற்கத்தைய கொள்கைகளை அமுல்படுத்தவுமே ரணில் விரும்புகின்றார்.
அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். வரலாற்றில் மிக சொற்ப காலத்தில் மக்களினால் வெறுக்கப்பட்ட ஓரே அரசாங்கம் இதுவாகும் பவித்ரா வன்னியாரச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.


0 Comments