அமெரிக்கா இலங்கையில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு முயற்சிப்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்திற்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்கள் இதனை உறுதி செ;யதுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய வலயத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு திட்டத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது வேறு ஒன்றுமில்லை, அமெரிக்கா இலங்கையில் இராணுவ முகாம் அமைப்பதனையே விரும்புகின்றது என்பதனை வெளிப்படுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவ முகாம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்காவுடன் இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இடதுசாரி கட்சிகள் காலணித்துவ ஆட்சியை இல்லாதொழிக்க விரும்புகி;ன்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பின்னோக்கி நகர்த்தி மீளவும் காலணித்துவ ஆட்சியை ஸ்தாபிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டி முறைமை ஆட்சி குறித்த நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments