புதைக்குழிகளுக்கு நாங்கள் பயம், பேய்களுக்கு நாங்கள் பயம், அரசியல்வாதிகள் மஹிந்தவுக்கு பயம், அதேபோன்று ரகர் விளையாட்டு வீரர்கள் யோஷித்தவுக்கு பயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐ.தே.கவின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவுக்கு பயம் என்ற காரணத்தினாலே அவரை மக்கள் நிராகரித்தார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த தோற்பதற்காகவே மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்க மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரிக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments