சிங்கப்பூரில் நீர்நிலைகளின் தரத்தை ஆய்வு செய்ய ஜி.பி.எஸ். மூலம் இயங்கக்கூடிய இயந்திர வாத்துகளை அந்நாட்டு அரசு பயன்படுத்தி வருகிறது.
கடல்மேல் வணிகம் செய்து தன்னிரைவு பெற்ற நாடு சிங்கப்பூர். ஒரு காலத்தில் முடக்கப்பட்டிருந்த நாடு இன்று உலகே வியக்கும் அளவுக்கு ஏற்றுமதியில் சொல்லி அடித்து வருகிறது. பொருளாதாரத்தில் சிங்கப்பூர் முன்னேற்றப் பாதையில் பயணித்தாலும், அதனால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டையும் அந்நாடு கவனிக்கத் தவறவில்லை.
அந்நாட்டில் உள்ள பந்தன் நீர்தேக்கத்தில் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு நடத்த ஜி.பி.எஸ். உதவியால் இயங்கக்கூடிய இயந்திர வாத்து பொம்மையை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
தண்ணீரின் ph அளவை ஆய்வு செய்து ஆய்வாளர்களுக்கு அனுப்பும் வல்லமை படைத்த வாத்து பொம்மையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆராய்ச்சியாளர்களால் இயக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் மாசுபடுவதை கண்காணிக்கும் இந்த வகையான வாத்து பொம்மையை சீனாவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


0 Comments