Subscribe Us

header ads

புத்தளம் அரசியல் சமூகத்தின் ஒற்றுமை ; வரலாற்றுச் சாதனை!!!

-Mohamed Iflal-


புகழனைத்தும் அல்லாஹுவுக்கே, அல்ஹம்துலில்லாஹ். 


இது காலவரையிலும் வெறுமனே சிந்தனை ரீதியான அரசியல் செயற்பாடுகளையும் காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கற்பனைத் திணிப்புக்களையும் செய்துவந்த அமைப்புக்கள் இயக்கங்களிலும் பார்க்க இன்று யதார்த்த ரீதியான அரசியல் பயணத்தை நோக்கி PPAF ஆரம்பித்து இருப்பது  பாராட்டத்தக்க முயற்சியாகும். 

எமக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை பெறக்கூடிய ஒரே வழி சுயேட்சை தான், அதற்காக எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற முயற்சியை PPAF அமைப்பினர் ஆரம்பித்து அதில் வெற்றியடைந்து இருப்பது உண்மையிலே புத்தளம் அரசியல் வரலாற்றில் முக்கியமான பதிவாகும்.

பொதுக்குழு அல்லது பொதுக் கூட்டமைப்பு என்ற சகலரும் ஒரே அணியில் தேர்தலில் போட்டியிடும் முயற்சி வெற்றி பெறுகின்றமைக்கு பாராட்டுக்குரியவர்களாக; கட்சியினையும் பதவிகளையும் விட்டுக் கொடுத்து சமூகத்துக்காக சிந்தித்து செயலாற்றும் கே.ஏபாயிஸ் உட்பட SLMC தரப்பினர் மற்றும் ஏனைய பிரதேச அரசியல் பிரமுகர்களும் பலர் உள்ளடங்குவர்.  

சமூகத்தில் அங்கீகாரம் கொண்ட பெரும் வாக்கு வங்கிகளைக் கொண்ட எமது பிரதேச அரசியல் தலைமைகள் பொது கூட்டமைப்பில் இணைந்திருப்பது காலத்துக்கேற்ற சமயோசிதமான தீர்மானமாகும். 

அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற உவமை இன்று எமது பிரதேசத்திலே மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரே அணியில் ஒரே சின்னத்தில் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்ட அணியினர் போட்டிடும் அதிசயமான சாதனையும் நமது ஊரிலே நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

இன்ஷா அல்லா இந்த அணியினரின் வேட்புமனு அங்கீகரிக்கப்பட்டு, வன்முறையில்லாத தேர்தல் பிரச்சாரம் மூலம் வெற்றியடைய கட்சி பேதமின்றி எம்மாலான சகல பங்களிப்புகளையும் ஆதரவையும் வழங்கி எமக்கான MP யை வெற்றிக்கொள்ள முயற்சிப்போமாக...

Post a Comment

0 Comments