சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிகார மோகம் காரணமாக ஆட்சியாளர் அதற்கு இடமளித்துள்ளார்.
ரிசாட் பதியூதின் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் இந்த அரசாங்கத்திலும் அமைச்சர். காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரவூப் ஹக்கீமின் நிலைமையும் அதுவே சரியென்றால் ஹக்கீமை நாடு நடத்த வேண்டும்.
மஹிந்தவின் வாக்குகளை உடைக்க நாம் வரவில்லை. நாம் யாருடைய வாக்குகளையும் சிதறடிக்க முயற்சிக்கவில்லை.
அரசியல்வாதிகளினால் நாட்டுக்கு உரிய சேவை ஆற்றப்படுவதில்லை.
நாட்டையும் இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க சிங்களவன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிங்கள உரிமையை நிச்சயமாக நாம் பாதுகாப்போம்.
எரான் விக்ரமரட்ன ஓர் கிறிஸ்தவ மதகுருவாகும், அவர் எவ்வாறு நாடாளுமன்றம் சென்றார் என்பது பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பணையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments