சட்டவிரோத தேர்தல் பிரச்சார விளம்பரங்களை அகற்றும் அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நகரம் அல்லது எல்லைக்கு உட்பட்ட பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளுராட்சி மன்றங்களுக்குரியதாகும்.
உள்ளுராட்சி மன்றங்களில் போதியளவு ஆளணி வளம் காணப்படுவதனால் சட்டவிரோத தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றும் பொறுப்பு உள்ளுராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு காணப்படும் அதிக வேலைப்பழு காரணமாக சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றுவது சிரமமானது.
எனினும், சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றதா என்பதனை கண்காணிக்கும் பணிகளை பொலிஸ் திணைக்களமும் தேர்தல் திணைக்களமும் மேற்கொள்ளும் என குறித்த அதிகாரி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களை அகற்றும் நடவடிக்கை எதிர்வரும் 13ம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.


0 Comments