நாட்டை பாதாளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளது.
பொங்கமுவ நாலக தேரர், மெதகம தம்மானந்த தேரர், இந்துராகரே தம்மரத்ன தேரர், கலாநிதி குணதாச அமரசேகர ஆகியோர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்யும் போது இன பேதங்களை கவனத்தில் கொள்ளவில்லை. வடக்கிலும் தெற்கிலும் ஒரே நேரத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் அதில் குறைப்பாடுகள் ஏற்பட்டிருக்குமாயின் அது தெற்கில் உள்ள சிங்களவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது எனவும் இவர்கள் கூறியுள்ளனர்.


0 Comments