சிரச ஊடகநிறுவனத்துக்கு எதிராக நாளைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு பொதுபலசேனா அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்பொருட்டு, நாளைய தினம் (30) காலை 10.00 மணிக்கு, கொழும்பு யூனியன் பிளேஸ் வளாகத்தில் ஒன்று கூடுமாறு தமது ஆதரவாளர்களுக்கு மேற்படி அமைப்பினர் குறுஞ்செய்திகளையும் அனுப்பி வைத்துள்ளனர்.
‘சிங்கள கொடி’ இனவாதிகளின் கொடி என கோடிட்டுக் காட்டி சிரச நிறுவனம் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், இந்நிறுவனம் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும் பொதுபலசேனா குற்றம் சாட்டியுள்ளது


0 Comments