Subscribe Us

header ads

மஹிந்தவின் அரசியல் மீள் பிரவேசம் மகிழ்ச்சி அளிக்கின்றது – ரஞ்சன் ரமநாயக்க


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் மீள் பிரவேசம் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியை விட்டு விலகியிருந்தால் சுதந்திரக் கட்சியை தாக்குவதற்கும் விமர்சனம் செய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ இல்லாத போது வேறு எவரையும் விமர்சனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை உள்ளடக்கியதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விமர்சனம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியீட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகுந்த நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments