Subscribe Us

header ads

ஐ.தே.க, ஜனாதிபதி மைத்திரி மீது குற்றம் சுமத்தாது - ஹரிசன்


ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கியது தொடர்பில் குற்றம் சுமத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார் எனவும், அதன் ஓர் கட்டமாக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியை ஏற்படுத்த ஜனாதிபதி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி முயற்சி மேற்கொண்ட போதிலும் சில தடைகள் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் சவாலாக கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments