Subscribe Us

header ads

கள்ளத்தனமாக சிகரெட் பிடித்த கணவனை கூகுளின் ஸ்ட்ரீட் வியூ உதவியால் கண்டுபிடித்த மனைவி



வடமேற்கு இங்கிலாந்தின் லீசோவ் டவுனில் வசித்துவரும் ஜூலி ரைடிங்(50) தனது கணவர் டோனால்டு(58) கள்ளத்தனமாக சிகரெட் பிடித்தபோது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ உதவியால் அவரை கையும்களவுமாக பிடித்தார்.

ஜூலி தன்னுடைய கணவரின் மீது உள்ள அன்பால், கணவனின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க நினைத்தார். டாக்டரின் உதவியுடன் அவரது சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தச் செய்தார். அவரின் உடல் நலத்தை மேம்படுத்த எண்ணி தினமும் உடற்பயிற்சிகள் தவறாமல் செய்ய வைப்பது, 3 மணி நேரம் நடைப்பயிற்சி என அவரை அன்பாக கண்காணித்து வந்தார்.

நடைபயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைக்க வைக்க வேண்டும் என்பதற்காக 3 நாய்களையும் வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார். எனினும், அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. 

இதையடுத்து கணவரின் நடவடிக்கைகளை வீட்டு கம்ப்யூட்டரிலிருந்து கூகுளின் ஸ்ட்ரீட் வியூவில் தேட எண்ணினார். அதில் அவரைக் கண்டபோது அவரது முகம் தெளிவாக இல்லை. தொடர்ந்து, இதை பயன்படுத்திய ஜூலிக்கு கணவர் திருட்டுத்தனமாக சிகரெட் பிடித்து வருவது தெரியவந்தது. இது அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. 

கணவரது உடல் நிலையை தேற்ற முடியாத நிலையில், தான் மட்டும் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாக வருந்துகிறார் ஜூலி.


Post a Comment

0 Comments