யட்டிநுவர பிரதேசத்தில் நேற்று (27) மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் சிங்கள இனவாதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தேசியக் கொடிக்கு ஒத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
தேசியக்கொடியில் இருக்கும் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள், நீக்கப்பட்ட கொடிகளே பறக்கவிடப்பட்டுள்ளன.
கொடிகளின் நடுவில் சிங்கமும் நான்கு மூலைகளில் அரச இலைகளும் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கொடிகளை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தரப்பினர் என்று கூறப்படும் சிலரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களிடமிருந்த புகைப்ப்டக் கருவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்களின் தோற்பட்டையைப் பிடித்து அவர்களை பாதுகாப்பு அரணுக்கு இழுத்துச் சென்றுள்ள மஹிந்தவின் பாதுகாப்பு தரப்பினர், பிரசாரக் கூட்ட மேடைக்கு அருகில் பறக்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடிகளை இறக்கும் வரையில் அவர்களை தடுத்து வைத்துமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


0 Comments