தம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கிமை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்தமைக்காக வருந்துவதாக குறிப்பிட்டார். தற்போது அந்த கட்சி ஒழுக்கமற்றவர்களால் கையேற்கப்பட்டுள்ளதாக ரணதுங்க தெரிவித்தார்.
சுசில் பிரேமஜயந்தவும் அனுரபிரியதர்சன யாப்பாவும் கொலையாளிகளுக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கும் வேட்புரிமை வழங்கியுள்ள நிலையில் தாம் அந்தக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையானது சிறந்தது என்று ரணதுங்க குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பின்பற்றவில்லை. ஊழல் கொள்கைகளையே பின்பற்றுகிறது என்றும் அர்ஜூன குற்றம் சுமத்தினார்.


0 Comments