Subscribe Us

header ads

மஹிந்த என்ற கிருமியை மீண்டும் பெருக்குவதற்கான அவசியம் மக்களுக்கு இல்லை: ஜே.சீ.அலவத்துவல


இந்நாட்டினுள் மீண்டும் சர்வாதிகார ஆட்சி உருவாகுவதற்கு இடமளிக்க வேண்டாம் என மேல் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

பொல்காவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

ராஜபக்சர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் கடந்த 10 வருடத்தினுள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திய தீங்குகளை மக்கள் மிக தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி அதிகாரத்தில் இருந்து துரத்திய கிருமிகள் மீண்டும் பெருக்குவதற்கான அவசியம் மக்களுக்கு இல்லை என்பதனை ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டும்.

குருணாகல் மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளை தேடி வந்த முன்னாள் ஜனாதிபதிக்கு அம்மாவட்டத்தில் தோல்வியடைந்து ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலைமை ஏற்படவுள்ளது.

10 ஆண்டுகள் மிதிக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் மீண்டும் எழுந்து நிற்பதனால் மஹிந்த ராஜபக்ச என்ற அந்நிய சக்திகள் மீண்டும் நாட்டிற்கு சேதம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை உலகத்தின் மிக சிறந்த நாடாக மாற்றுவதற்காக குருணாகல் மக்கள் ஆர்வத்துடன் முன் நிற்பது தொடர்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments