Subscribe Us

header ads

ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை மதிக்கும் மஹிந்த


தனக்கு வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த அர்ப்பணிப்பை மதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் நேற்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஜனாதிபதியை பாதுகாப்பதோடு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதற்கு செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்க தீர்மானிக்கவில்லை என சோபித்த தேரரிடம் குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments