Subscribe Us

header ads

4 கால்களுடன் உலா வரும் அதிசய கோழி குஞ்சு


வாழப்பாடி அக்ரஹாரம் வைத்திபடையாச்சி தெரு பகுதியை சேர்ந்தவர், கலைஞர்புகழ் (வயது 40) இவரது மனைவி அரசுபள்ளி ஆசிரியை வளர்மதி. இவர்கள் தங்கள் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகின்றனர்.

அதில் 10 முட்டையிட்டு 22 நாட்கள் அடைகாத்த கோழி ஒன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு 8 கோழிக்குஞ்சு பொரித்தது. அதில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் வழக்கமாக இருக்கும் 2 கால்களை தவிர கூடுதலாக 2 கால்கள் உள்ளன.
4 கால்களுடன் மற்ற கோழிக் குஞ்சுகளை போல சகஜமாக தாயுடன் உலாவரும் அந்த அதிசய கோழிக்குஞ்சு, அவ்வப்போது 4 கால்களையும் நடப்பதற்கு பயன்படுத்துவது குறித்து தகவல் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த அபூர்வ கோழிக்குஞ்சை காண படையெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments