Subscribe Us

header ads

கண்டியில் களமிறங்கவுள்ளார் அசாத் சாலி


முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதனை அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அல்லது தனித்து தாம் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்ட மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே தாம் போட்டியிடுவதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

தாம், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசியதாகவும் ஏற்கனவே கண்டி மாவட்டத்தில் போட்டியிட இரண்டு முஸ்லிம்களை பரிந்துரைத்துள்ளதாக ரணில் குறிப்பிட்டதாகவும்  அசாத் சாலி தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் பல முஸ்லிம்கள் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டமையை சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இனவாத அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்துள்ளதாக அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments