மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக போட்டியிட அனுமதிக்கும் கடிதம் ஒன்றின் அடிப்படையில் நேற்றைய தினம் உருவான சூழ்நிலை திட்டமிட்ட நாடகம் என தெரிவித்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஜனாதிபதி நியமனத்தை ஏற்றுக்கொள்வதாக கையொப்பமிடவில்லையென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிராகரித்ததைத் தொடர்ந்து அதில் சுசிலை மிரட்டி கையொப்பமிட வைக்க வைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எந்தவொரு முடிவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிNசுன அவ்வாறு எந்த அனுமதியையும் வழங்கவோ கையொப்பமிடவோ இல்லையெனவும் அர்ஜுன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments