Subscribe Us

header ads

பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசனின் மீசையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசனின் சுவரொட்டிக்கு மீசை வரைந்த மாணவனை தாக்கியதாகக் கூறும் சந்தேக நபரை அனுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயதுடைய நிமேஷ் என்ற மாணவனேயே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் போது குறித்த மாணவன் தன் வீட்டின் முன்னுள்ள மரத்தில் ஒட்டப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசனின் சுவரொட்டிக்கு மீசை வரைந்துள்ளார்.
இதனையடுத்து, மறுநாள் வெள்ளிக்கிழமை மாணவன் பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் வழியில் யாரோ தன்னை தாக்கியதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவின் பெற்றோர் அனுராதபுரம் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

Post a Comment

0 Comments