முதல் முறையாக சூரிய ஒளிப்படும் பூமியின் பக்கத்தை சுமார் 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்து நாசா செயற்கை கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
நாசாவின் டிஸ்கவர் செயற்கை கோள் பாலிகுரோமட்டிக் இமேஜிங் கேமரா என்ற சிறப்பு மிக்க கேமரா மூலம் பூமியின் மீது சூரிய ஒளிப்படும் பக்கத்தின் வண்ணப்படத்தை எடுத்துள்ளது. ஜூலை 6-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பூமியில் உள்ள பாலைவன மணல், ஆற்றின் பாதைகள் மற்றும் சிக்கலான மேகம் வடிவங்கள் போன்றவற்றை தெளிவாக காட்டுகிறது.
பலரையும் ஆச்சிரியப்படுத்திவரும் இந்த புகைப்படம் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டுவைக்கவில்லை. ஒபாமா தனது டுவிட்டர் தளத்தில் ”இந்த அற்புதமான படத்தை பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுப்படுத்தப்படுகிறது. நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த அழகான கோளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்பது தான் அது” என குறிப்பிட்டுள்ளார்.


0 Comments