பொதுத்தேர்தலில் தான் நடுநிலைமை வகிக்கப்போவதாக 13 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது ஊழல் சகாக்களிற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்ற அழுத்தங்களிற்கு உட்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திக்கற்றவர் போல தென்படுவதாக அவரை சந்தித்துள்ள இலங்கையின் சிவில்சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவிற்கு வாய்ப்பை வழங்குவதற்கு தாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட வேளை அவர் தான் கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு;ள்ளார். தனக்கு கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்திற்கு சார்பாக செயற்படுவதை தவிரவேறு வழி தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பெரும்பான்மை சமூகத்தினரின் ஆதரவுள்ளதால் தாங்கள் தேர்தலில் வெல்வதற்கு ராஜபக்ச தேவை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் கருதுகின்றன, அதனால் அவரிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என அவை வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இதேவேளை யூலை 13 ம் திகதிக்கு பின்னர் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக சிறிசேன சிவில் சமூகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த அறிவிப்பு எது தொடர்பானது என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி தான் இந்த தேர்தலில் நடுநிலை வகிப்பதாகவும் மக்கள் யார் பிரமராக வரவேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களை தெரிவுசெய்யட்டும் என அறிவிப்பார் என சிவில்சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்ட மார்ச் 12 பிரகடனத்தை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொள்வார்.
குற்றச்செயல்களிற்காக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளிற்கும்,ஊழல் புரிந்து தண்டிக்கப்பட்வர்களிற்கும்,போதைப்பொருள், சூதாட்டம், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபட்டவர்களிற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை என அரசியற்கட்சிகள் மார்ச் 12 பிரகடனம் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளன.
சிறிசேன மார்ச் 12 பிரகடனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், ராஜபக்சவிற்கும் அவரது சகாக்களிற்கும் வாக்களிக்க வேண்டாம் என அவர் கோருவதாக மக்கள் கருதுவார்கள்

0 Comments