Subscribe Us

header ads

ராஜித, சம்­பிக்க, அத்­து­ர­லிய ­தேரர் யானை சின்னத்தில் போட்டி

எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சம்­பிக்க ரண­வக்க, மற்றும் அத்­து­ர­லிய ரத்­தன­ தேரர் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின்  உப­த­லைவர் ராஜித சேனா­ரட்ன தெரிவித்தார்.


நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அன்று அனைத்து வரப்பிரசாதங்களையும் கைதிறந்து மிகவும் போரட்டத்துக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம்.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றினோம். அபிவிருத்திகளையும் மேற்கொண்டோம். ஆனால் கூறிய அனைத்தும் செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அத்துரலிய ரத்தன தேரர், சம்பிக ரணவக்க உள்ளிட பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட உள்ளோம். 
எமக்கு பொதுச் சின்னமொன்றை உருவாக்க நேரகாலம் போதுமானதாக இருக்கவில்லை என்பதால் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளோம் என்றார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்­பு­மனு வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின்  உப­த­லைவர் ராஜித சேனா­ரட்ன அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க எம்.கே.டி.எஸ். குண­வர்த்­தன மற்றும் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர, ஜாதிக ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­தி­க­ளான சம்­பிக்க ரண­வக்க, மற்றும் அத்­து­ர­லிய ரத்­தன ­தேரர் ஆகியோர் அதி­ருப்­தி­ய­டைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments