சவூதி அரேபியாவில் வேகக் கட்டுப்பாட்டை மீறி கார் ஓட்டுபவர்களை Saher காமிராக்கள் படம் பிடித்து அபராதம் விதிக்கப் படுகின்றன. நெடுஞ் சாலைகளில் Saher காமிரா பொருத்தப் பட்ட வாகனம் நிறுத்தப் பட்டிருப்பதை காண்போரில் சிலர், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெட் லைட் மூலம் சமிக்சை செய்து தெரிவிக்கின்றனர். புரிந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் வேகத்தை கட்டுப் பாட்டில் கொண்டு வந்து விடுகின்றனர்.
இது போல் Saher காமிரா பற்றி எதிரில் வருபவர்களுக்கு சமிக்சை செய்வது தவறு என்று சிலர் கூறினாலும், சமிக்சை செய்வதில் நன்மை உள்ளதாக பலர் கூறுகின்றனர். சமிக்சை செய்வதில் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளதாக கூறப் படுகின்றது.
1. எதிரில் வேகக் கட்டுப் பாட்டை மீறி வேகமாக வருபவர்களுக்கு, வேகத்தைக் கட்டுப் படுத்த அறிவுறுத்தும்.
2. அவரை அபராதம் செலுத்துவதில் இருந்து காப்பாற்றும்.
அதனால் தான் நகர்புறங்களில் உள்ள நெடுஞ் சாலைகளில் Saher காமிரா பொருத்தப் பட்டுள்ள இடங்களில் சற்று தூரத்திற்கு முன்பே அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.
தி. ரஹ்மத்துல்லா
-Vkalathur-


0 Comments