அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்களின் முன்னழகை பாதுகாக்க விரும்பிய பணக்காரப் பெண்கள் அடிமைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டி வளர்க்க வைத்தனர்.
உலகிலேயே ஈடிணையற்றது எது? என்று ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு ஒன்றல்ல.., இரண்டு பதில்கள் உடனடியாக கிடைத்து விடும்.
ஒன்று, தாயன்பு - மற்றொன்று, தாய்ப்பால் என்பதே அந்த பதில்களாக இருக்க முடியும்.
இத்தகைய மருத்துவ குணாம்சமும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத மகத்துவமும் நிறைந்த தாய்ப்பாலை சேகரித்து வைக்கும் வங்கிகள் வெளிநாடுகளில் ஏராளமாக உள்ளன. நாகரிக மாற்றத்திற்கேற்ப அனைத்தும் மாறிப்போன தற்காலத்தில் தாய்ப்பால் வங்கிகளும் 'ஆன்லைன்' மூலம் விளம்பரப்படுத்தி, வியாபாரத்தை பெருக்கி வருகின்றது.
இப்படி பெருகிவரும் இந்த வியாபாரமானது பிரசவத்தின்போது தாயை இழந்த குழந்தைகளை மட்டும் வாழ வைக்கவில்லை. பொலிக்காளை போல் உடல்கட்டை பெருக்கிக்காட்ட துடிக்கும் அமெச்சூர் ஆணழகர்கள் மற்றும் தடகள வீரர்கள் அதிக வலிமையும், தெம்பும், உற்சாகமும் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் தாய்ப்பாலை வாங்கி பயன்படுத்தி வருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால், தாயில்லா குழந்தைகளுக்கு உதவிடும் நோக்கில் செயல்பட்டுவரும் இலவச தாய்ப்பால் வங்கிகளுக்கு எந்தப் பெண்ணும் தாய்ப்பாலை தானமாக தர முன்வர மாட்டாள்.
மாறாக, ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி விலைக்கு விற்கவே அவள் முயற்சி செய்வாள். இதனால் லாப நோக்கமின்றி செயல்படும் தாய்ப்பால் வங்கிகள் இழுத்து மூடப்படும் அபாயமும், இவற்றை நம்பி இருக்கும் பல குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்காமல் பலியாகும் ஆபத்தும் காத்திருக்கின்றது என அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'தாய்ப்பாலே மருந்து’ பருவ இதழின் ஆசிரியரான ஆர்துர் இய்டில் மேன் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


0 Comments